உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அம்பேத்கர் - காங்கிரஸ் முரண்பாடுகளை பட்டியலிட்ட அமித் ஷா! Amit Shah Speech about Ambedkar in Rajya S

அம்பேத்கர் - காங்கிரஸ் முரண்பாடுகளை பட்டியலிட்ட அமித் ஷா! Amit Shah Speech about Ambedkar in Rajya S

ராஜ்யசபாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரை இகழ்ந்து பேசியதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதற்கு பாஜ மறுப்பு தெரிவித்ததுடன், கடும் கண்டமும் தெரிவித்துள்ளது. ராஜ்யசபாவில் நேற்று அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதாவது: இப்போது ஒரு பேஷன் அதிகரித்துள்ளது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர்... அம்பேத்கர் என்கின்றனர். இத்தனை முறை கடவுளின் பெயரை உச்சரித்தால், 7 ஜென்மங்களுக்கு சொர்க்கம் கிடைத்திருக்கும். ஆம்... அம்பேத்கரின் பெயரை உச்சரிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவரின் பெயரை 100 முறை உச்சரியுங்கள். ஆனால் அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி எப்படி நடத்தியது என்பதை நான் இங்கு விளக்க விரும்புகிறேன். நாட்டின் முதல் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற அம்பேத்கர், தலித், பழங்குடியினர் விவகாரத்தில் அரசின் செயல்பாடுகளில் அதிருப்தி கொண்டார். ஜம்மு - காஷ்மீரில் அமல்படுத்தப்பட்ட 370வது சட்டப்பிரிவை எதிர்த்தார். இப்படி பல அதிருப்திகளால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் அரசின் போக்கில் மனம் ஒப்பாததால், அவர் பதவி விலகினார். அம்பேத்கர் ராஜினாமா செய்வதால் அமைச்சரவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என அப்போதைய பிரதமர் நேரு கூறினார். ஓட்டு வங்கி அரசியலுக்காக அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் காங்கிரசார், உண்மையில் அவரை மதித்ததில்லை. அவருக்கான நினைவிடம் கூட, பாஜ ஆட்சியில் தான் கட்டப்பட்டது. ஒன்றல்ல, 5 இடங்களில் அம்பேத்கர் நினைவிடத்தை நாங்கள் கட்டினோம். அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14ம் தேதியை தேசிய நல்லிணக்க நாளாகவும், அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பர் 26ம் தேதியை சம்விதான் திவஸ் எனவும் அறிவித்த மத்திய அரசின் செயலை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் எதிர்த்தனர்.

டிச 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ