/ தினமலர் டிவி
/ பொது
/ முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி என்கிறார் அம்மன் அர்ஜூனன் | Amman Arjunan | ADMK MLA | 13 Ho
முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி என்கிறார் அம்மன் அர்ஜூனன் | Amman Arjunan | ADMK MLA | 13 Ho
கோவை வடக்கு எம்எல்ஏவும் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமாக இருப்பவர் அம்மன் அர்ஜுனன். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் 9 பேர் செவ்வாயன்று காலை முதல் அவரது வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தினர். தகவல் அறிந்து அவரது வீட்டின் முன்பு முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, செங்கோட்டையன் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள், தொண்டர்கள் குவிந்தனர். சுமார் 13 மணி நேர சோதனைக்கு பிறகு லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சென்ற நிலையில் அங்கு திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள், மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். வீட்டை விட்டு வெளியே வந்த அம்மன் அர்ஜுனன், ஆதரவு தெரிவித்த தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பிப் 25, 2025