உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தந்தை மீதான கோபத்தில் மகளை பழிதீர்த்த பெண்

தந்தை மீதான கோபத்தில் மகளை பழிதீர்த்த பெண்

6 வயது சிறுமி கால்வாயில் வீசப்பட்ட கொடூரம்! பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரம் ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் புங்கனூரை சேர்ந்தவர்கள் அசன்துல்லா- சானியா தம்பதி. இவர்களுக்கு அஸ்ஃபியா Asfiya என்ற 6 வயது மகள் இருந்தாள். கடந்த மாதம் 29ம் தேதி தேதி இரவு வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த அஸ்ஃபியா, திடீரென காணாமல் போனாள். பதறிபோன பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடினர். மகள் கிடைக்கவில்லை. போலீசில் புகார் அளித்தனர். குழந்தை கடத்தப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். 12 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். கடந்த 2ம் தேதி அங்குள்ள ஏரிக்கால்வாயில் அஸ்ஃபியா கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், இது தொடர்பாக 2 பெண்கள், ஒரு சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் பிடித்துள்ளனர். கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அஸ்ஃபியாவின் தந்தை அசன்துல்லா சொந்த தொழிலுடன் பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு 3 லட்சம் கடன் கொடுத்துள்ளார். அசலும், வட்டியும் திருப்பி தராமல் அந்த பெண் இழுத்தடித்து வந்தார். பணத்தை திருப்பி தருமாறு அசன்துல்லா அந்த பெண்ணை அடிக்கடி நிர்பந்தித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் அசன்துல்லாவை பழிவாங்க அவரது மகளை கடத்தி கொலை செய்து ஏரியில் வீசியுள்ளார்.

அக் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ