கருவுறுதல் விகிதம் குறைவதால் ஆந்திரா புது திட்டம் andhra|cm chandrababu naidu| andhra population
இளம் தம்பதிகள் அதிகமாக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது. 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதி உடையவர்கள் என்ற சட்டத்தை கொண்டு வர மாநில அரசு யோசித்து வருகிறது. அதிக குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்க அரசு வழங்ககூடும். தென் இந்தியாவில் முதியோர் அதிகரித்து உள்ளனர். இது தேசிய பிரச்னை. ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்ததால் பொருளாதார சுமையுடன் சிக்கி தவிக்கின்றன. பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்தால் இந்தியாவையும் அது பாதிக்கும். ஆந்திரா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள கிராமங்களில் வயதானவர்கள் மட்டுமே அதிகம் உள்ளனர்