உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிரதமர் ரேசில் இருந்து அனிதா விலகல்: காரணம் இதுதான் Anita Indira Anand| Indian Origin Canadian |Pol

பிரதமர் ரேசில் இருந்து அனிதா விலகல்: காரணம் இதுதான் Anita Indira Anand| Indian Origin Canadian |Pol

கனடா பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 7ம் தேதி பதவி விலகினார். லிபரல் கட்சி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். கனடாவில் இந்தாண்டு பொது தேர்தல் நடைபெற உள்ள சூழலில், பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரா ஆர்யா போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இவரது பூர்வீகம் கர்நாடகா. கோவை மாவட்டம் வெள்ளலூரை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா ஆனந்த் என்பவரும் பிரதமர் பதவிக்கான ரேசில் இருந்தார். அனிதாவின் பெற்றோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அனிதாவின் தந்தை வழி தாத்தா வி.ஏ. சுந்தரம் சுதந்திர போராட்ட தியாகி. வக்கீலான அனிதா இந்திரா 2019ல் முதல் முறையாக லிபரல் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு ஓக்வில் தொகுதியில் வெற்றி பெற்று எம்பி ஆனார். ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவையிலும் இடம் பெற்றார். 2021 தேர்தலில் வெற்றிபெற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆனார். ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகலுக்கு பிறகு அடுத்த பிரதமர் பதவிக்கான ரேசில் அனிதாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனால் தான் தேர்தலில் போட்டியிடவில்லை என அனிதா திடீரென அறிவித்துள்ளார். எனக்கு கனடா அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் வழங்கிய ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றி. தேர்தலில் நான் போட்டியிடவில்லை. என்னை எம்.பி. ஆக்கிய ஓக்வில் தொகுதி மக்களுக்கு நன்றியுடன் இருப்பேன். ஜஸ்டின் ட்ரூடோ அடுத்த அத்தியாயத்துக்கு செல்ல முடிவு செய்துள்ளார். நானும் அது போலவே செயல்பட வேண்டிய நேரம் இது. மீண்டும் கல்வி பணிக்கு திரும்புகிறேன் என அனிதா கூறி உள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன் அனிதா அமெரிக்காவின் யேல் பல்கலைகழகத்தில் சட்ட துறை பேராசிரியராக பணியாற்றினார். மீண்டும் கற்பிக்கும் பணியை தொடர முடிவு செய்துள்ளார். இந்தாண்டு இறுதியில் நடக்கும் கனடா தேர்தலில் லிபரல் கட்சிக்கு சாதகமான நிலை இல்லை என கூறப்படுகிறது.

ஜன 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ