உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாணவி FIR லீக்-சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு anna university girl case | DMK vs BJP | SC order

மாணவி FIR லீக்-சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு anna university girl case | DMK vs BJP | SC order

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் 19 வயதான இன்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழகம் பக்கத்தில் பிரியாணி கடை வைத்திருந்த திமுகவை சேர்ந்த ஞானசேகரன் என்பவன் கைது செய்யப்பட்டான். இதுபோன்ற பாலியல் விவகாரங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை எந்த விதத்திலும், யாரும் வெளியிடக்கூடாது என்பது சட்டம். ஆனால் மாணவியின் பெயர், ஊர் விவரங்களுடன் எப்ஐஆர் காப்பி வெளியானது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டும் அல்ல, பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றம் சொல்வது போல எப்ஐஆரில் எழுதப்பட்டு இருந்தது விமர்சனத்தை ஏற்படுத்தியது. அரசியல் ரீதியாக நெருக்கடி ஏற்பட்டதால், எப்ஐஆர் லீக் பற்றி சென்னை போலீஸ் கமிஷனர் அருண் விளக்கம் அளித்தார்.

ஜன 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை