மாணவி கதறிய இடத்தில் நின்ற கார்: மர்மம் என்ன? | Anna University | Anna University Issue
டிஸ்க்: மாணவி கதறிய இடத்தில் நின்ற கார்: மர்மம் என்ன? | Anna University | Anna University Issue சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் கடந்த 23ம் தேதி இரவு 19 வயது மாணவி காதலனுடன் பேசிக்கொண்டு இருந்தார். அங்கு வந்த மர்ம நபர் காதலனை மிரட்டி விரட்டி விட்டு மாணவியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி உள்ளார். இது தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் மகளிர் போலீசார் விசாரித்தனர். அதே பகுதியில் உள்ள மண்டபம் தெருவைசேர்ந்த ஞானசேகரை கைது செய்தனர். சைதாப்பேட்டை கோர்ட் ஆஜர்படுத்தப்பட்ட அவனை ஜனவரி 8 வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற போது ஞானசேகருக்கு கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சென்னை ஸ்டான்லி ஆஸ்பிடலில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டான். பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் வன்முறை செய்த ஞானசேகர் அங்கிருந்த ஆடி கார் பின்புறம் தரையில் அமர வைத்ததாக கூறப்படுகிறது. அப்படியானால் அந்த கார் யாருடையது? அதில் வந்த நபர் யார்? மாணவிக்கு சீண்டல் நடந்த போது கார் உள்ளே யாராவது இருந்தார்களா? என்பதும் மர்மமாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க சில ஆண்டுகளுக்கு முன் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழில் அதிபர் காரில் கடத்தப்பட்டார். இந்த வழக்கில் மாணவியிடம் அத்துமீறிய ஞானசேகரன் அவரின் சகோதரர் சுரேஷ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் பெண்கள். ஞானசேகர் கும்பலிடம் இருந்து, துப்பாக்கி, கத்தி, சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஞானசேகர் மீது, திருவான்மியூர், சாஸ்திரி நகர், நந்தம்பாக்கம் காவல் நிலையங்களில், திருட்டு, வழிப்பறி, பாலியல் தொல்லை வழக்குகள் உள்ளன. அவன் ஒரு ரவுடி. ஞானசேகரின் குடும்பமே குற்ற பின்னணி கொண்டது என போலீசார் கூறுகின்றனர்.