உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அண்ணாமலையின் நிர்வாக திறமையை பாராட்டிய அமித்ஷா | Annamalai | Amit shah | BJP | state President to Na

அண்ணாமலையின் நிர்வாக திறமையை பாராட்டிய அமித்ஷா | Annamalai | Amit shah | BJP | state President to Na

பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் முடிவதால் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடக்கிறது. இதற்கான விருப்ப மனு தாக்கல் பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடந்தது. திருநெல்வேலி தொகுதி எம்எல்ஏவும், பாஜ சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் மாநில தலைவர் பதவிக்கு விருப்ப மனு தாக்கல் செய்தார். அண்ணாமலை, வானதி, எல்.முருகன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர் நாகேந்திரனின் பெயரை பரிந்துரைத்தனர். நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தமிழக பாஜ தலைவராக அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளார்

ஏப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை