அதிமுகவின் போராட்டத்தை பாராட்டிய அண்ணாமலை annamalai| bjp| palanisamy| admk
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். சம்பவத்தின்போது, ஞானசேகர், செல்போனில் யாரிடமோ சார் என குறிப்பிட்டு பேசியதாகவும், அவரை போலீசார் மறைப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார். இதை மையமாக வைத்து அதிமுகவினர் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார்? Save our Daughters என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களை சென்னை உட்பட பல மாவட்டங்களில் அதிமுகவினர் ஒட்டி உள்ளனர்.
டிச 29, 2024