உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அது நினைவிருக்கட்டும்! அண்ணாமலை எச்சரிக்கை | Annamalai | Alankanallur Jallikattu | Madurai Collector

அது நினைவிருக்கட்டும்! அண்ணாமலை எச்சரிக்கை | Annamalai | Alankanallur Jallikattu | Madurai Collector

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் அறிக்கை; மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் துணை முதல்வர் உதயநிதி சென்றுள்ளார். விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை உட்கார வைப்பதற்காக, மதுரை கலெக்டர் சங்கீதாவை மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. துணை முதல்வர் மகனின் நண்பர்களுக்காக, பெண் கலெக்டரை எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 முதல் 11 ஆட்சி காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம். முதல்வர் குடும்பத்துக்கு சேவகம் செய்வதற்காகவே இருக்கும் அமைச்சர்கள் மேடையில் இருக்கையில், பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்? துணை முதல்வர் உதயநிதிக்கு, 2011 தேர்தல் முடிவுகளும், அதற்குப் பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு தமிழக மக்கள் 2026ல் முடிவு கட்டுவார்கள் என அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜன 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ