உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இது எதிர்க்கட்சியின் அடிப்படை கடமை; அண்ணாமலை காட்டம் | Annamalai | Tiruttani | Tiruttani Incident |

இது எதிர்க்கட்சியின் அடிப்படை கடமை; அண்ணாமலை காட்டம் | Annamalai | Tiruttani | Tiruttani Incident |

திருத்தணியில் நடந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் சைபர் குற்றப் பிரிவு போலீசில் வழக்கு பதிவாகி விசாரணை நடக்கிறது. தாக்குதல் வீடியோவை சிலர் தங்கள் எக்ஸ் தளத்தில் பதிவேற்றியதாக கூறப்படுகிறது. பின் ஆன்லைனில் பரப்பப்பட்டது. இது அமைதி பொது ஒழுங்கு, சமூக நல்லிணக்கத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின்படி இந்த இணையதள முகவரி, சட்ட விரோத செயலை செய்ய பயன்படுத்தப்படுகிறது. . ரயில் பயணத்தின்போது கத்தியை வைத்து ஒருவரை தாக்குவது போன்ற வீடியோக்களை பரப்புவது இளைய தலைமுறையினரை வன்முறையில் ஈடுபட வழிவகுக்கும். மேலும் குற்றங்கள் நிகழாமல் தடுக்க இந்த முகவரிகளை முடக்க வேண்டும் என எக்ஸ் நிறுவனத்துக்கு தமிழக சைபர் குற்றப்பிரிவு தலைமையக டிஜிபி சந்தீப் மிட்டல் கடிதம் எழுதியுள்ளார். அரசின் அக்கறையின்மை மற்றும் நிர்வாக சீர்குலைவை அம்பலப்படுத்துவது எதிர்க்கட்சியின் அடிப்படை கடமை. இந்த தோல்விகளை முன்னிலைப்படுத்துவது திமுக அரசுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தினால் அதற்கான தீர்வு, எக்ஸ் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுப்பது அல்ல. எதிர்க்கட்சிகளின் குரலை அடக்குவதற்கு பதில் முதலில் தங்களுக்கு ஓட்டளித்த மக்களுக்கு வேலை செய்ய திமுக அரசு முயற்சிக்கலாம் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்து உள்ளார். #Annamalai | #Tiruttani | #TiruttaniIncident | #TNPolice | #TNGovt

ஜன 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி