பார்லிமென்டில் ராகுலை மறைமுகமாக விமர்சித்த அனுராக் anurag thakur| Rahul|
பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் முன்பு பேசிய காங்கிரஸ் லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல், நாடு மத்திய அரசின் சக்ரவியூகத்தில் சிக்கி தவிக்கிறது. அதை உடைப்போம் என்றார். பட்ஜெட்டுக்கு முன் அல்வா கிண்டும் நிகழ்ச்சியில் கூட தலித் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வாய்ப்பு தரவில்லை; ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி காட்டுவோம் என ராகுல் கூறியிருந்தார். முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் பதில் இதற்கு அளித்து பேசினார். மத்திய அரசின் சக்ரவியூகத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக ராகுல் கூறுகிறார். சக்ரவியூகத்திற்கு பத்ம வியூகம் என்ற பெயரும் இருப்பதாக பாஜவின் தாமரை சின்னத்தை குறிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.
ஜூலை 31, 2024