உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிகாரியின் பாலின மாற்றத்தை ஏற்றது மத்திய அரசு |Anusuya IRS | Anu kathir Surya | Gender Recognition

அதிகாரியின் பாலின மாற்றத்தை ஏற்றது மத்திய அரசு |Anusuya IRS | Anu kathir Surya | Gender Recognition

ஆணாக மாறிய பெண் அதிகாரி ஆதரவுக்கரம் நீட்டிய மத்திய அரசு ஐதராபாத்தில் உள்ள சுங்கம் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைமை ஆணையர் அலுவலகத்தில் அனுசுயா என்பவர் இணை ஆணையராக பணிபுரிந்து வருகிறார். அவர் தன்னை ஆணாக உணர்ந்ததால் அனுகதிர் சூர்யா என தனது பெயரை மாற்றிக்கொண்டார். தனது பாலின மாற்றத்தை அங்கீகரித்து, பெயர் மாற்றத்தை ஏற்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்துக்கு அவர் கோரிக்கை வைத்தார். நிதி அமைச்சகம் அந்த கோரிக்கையை பரிசீலித்து ஏற்றுக்கொண்டது. இனி அனைத்து அலுவலக பதிவுகளிலும் அனுசுயாவின் பெயர் அனுகதிர் சூர்யாவாக மாற்றப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஜூலை 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை