ஜப்பான், கத்தாருடன் அர்ஜென்டினா அணி மோதல் Foot ball | International exhibition match | Messy | Ke
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் கால் பந்து விரும்பிகள் அதிகம் உள்ளனர். அவர்களின் ஆதர்ச வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸிக்கு முக்கிய இடமுண்டு. மெஸ்ஸி 2011ல் கேரளாவில் நடந்த கால்பந்து காட்சி போட்டியில் பங்கேற்க வந்தார். வெனிசுலாவுக்கு எதிராக நடந்த போட்டியில் பங்கேற்றார். 14 ஆண்டுக்கு பிறகு அவர் அடுத்த ஆண்டு மீண்டும் கேரளா வர உள்ளார். லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளது. ஜப்பான் மற்றும் கத்தார் நாட்டு அணிகள் அர்ஜென்டினா அணியை எதிர்த்து விளையாடவுள்ளன. ரூ.100 கோடி செலவில் கேரள அரசு இந்த போட்டியை நடத்துகிறது. கொச்சியில் ஒரு போட்டி நடக்கிறது. அர்ஜென்டினா கால்பந்து சங்க நிர்வாகிகள் விரைவில் கேரளா வந்து இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். அதன்பிறகு போட்டி குறித்த இறுதி அறிவிப்பு வெளியிடப்படும் என கேரள விளையாட்டு அமைச்சர் அப்துல் ரஹிமான் தெரிவித்துள்ளார்.