ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தாம்பரம் ரவுடி கைது | Armstrong case | Rowdy Arrest | Tambaram Police | Investi
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தனிப்படை விசாரணையில் அரசியல் புள்ளிகள், வக்கீல், ரவுடி என பலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. திமுக, அதிமுக, பாஜ, காங்கிரஸ், தமாகா என முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து கைதாகினர். அரசியல், தொழில் போட்டி, முன்பகை என மொத்தமாக கூட்டு சேர்ந்து பல நாள் திட்டம் தீட்டி கூலி படையை ஏவி காரியத்தை முடித்தது தெரிந்தது. ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததால் ஆற்காடு சுரேஷின் வலது கரமான சீசிங் ராஜாவையும், முன் பகை மற்றும் கட்டப்பஞ்சாயத்து மோதலில் தொடர்புடையதாக கருதப்படும் சம்போ செந்திலையும் இன்னும் பிடிக்க முடியவில்லை. இதுவரை இந்த வழக்கில் 27 பேர் கைதாகி உள்ள நிலையில் பிரபல தாதாக்களான இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க தான் தனிப்படை தீவிரம் காட்டி வருகிறது. 2 தாதாக்களின் கூட்டாளிகள், நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுக்கு அறிமுகமானவர்கள் என ஒருவரையும் போலீசார் விடவில்லை. அப்படி லிஸ்டில் இருந்தவர் தான் தாம்பரத்தை சேர்ந்த ரவுடி சஜித். சஜித், சீசிங் ராஜாவின் கூட்டாளி. சஜித்தை பிடித்தால் கண்டிப்பாக சீசிங் ராஜா பதுங்கி உள்ள இடம் தெரியவரும். கொலை தொடர்பான முக்கிய தகவல்களும் கிடைக்கும் என போலீசார் நம்பினர்.