உடனடியாக போன் செய்த சந்திரபாபு நாயுடு! கண்ணீரில் குடும்பம் | Army jawan | Andhra Pradesh | Pa
நேற்று இரவு முதல் நம் எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று நடந்த தாக்குதலில் காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் பாதுகாப்புப்படை வீரர் முரளி நாயக் மரணம் அடைந்துள்ளார். இவருக்கு வயது 25. ஆந்திரா சத்யசாய் மாவட்டத்தை சேர்ந்தவர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ராணுவ வீரர் முரளி நாயக்கின் மறைவுக்கு அவரது குடும்பத்தினரிடம் போனில் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் செந்தூரில் வீரமரணம் அடைந்த ஜவான் முரளி நாயக்கின் தியாகத்தை இந்திய தேசம் ஒருபோதும் மறக்காது. தாய்நாட்டிற்காக தனது உயிரைத் தியாகம் செய்த முரளியின் தியாகத்தை முழு நாடும் நினைவில் கொள்ளும் என்றும் சந்திரபாபு கூறி உள்ளார். முரளி நாயக் குடும்பத்தினரை அமைச்சர் சவிதா நேரில் சந்தித்து ஆறுதல் கூறி மாநில அரசு சார்பில் 5 லட்சம் காசோலையை வழங்கினார். அப்போது முரளி நாயக் தாய் கதறி அழுத காட்சிகள் காண்போர் நெஞ்சை உலுக்கியது.