அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ வீரர்களுக்கு நேர்ந்த சம்பவம்! | rmy Vehicle fell in to the gorge
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில், எல்லையை காக்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கடும் மழை, பனிப்பொழிவுக்கு இடையிலும் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். சீன வீரர்கள் அத்துமீறலை தடுக்க இரவு பகலாக ராணுவ வீரர்கள் காவல் காக்கின்றனர். அங்கு பணியாற்றும் வீரர்கள் அவ்வப்போது மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்வது வழக்கம். அதே போல், ராணுவ கட்டுமானங்களுக்கு தேவையான பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களையும் ராணுவ வீரர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வர். அந்த வகையில், டபோரிஜியில் இருந்து லிபாரடா எனும் இடத்துக்கு, ராணுவத்துக்கு சொந்தமான டெம்போ வாகனத்தில் வீரர்கள் சிலர் சென்றனர். வழியில் எதிர்பாராத விதமாக வாகனம் நிலைதடுமாறி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. அக்கம் பக்கத்தினர் வாகனத்தில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வாகனம் கவிழ்ந்ததில் அதில் பயணித்த ராணுவ வீரர்களான நகத் சிங், முகேஷ் குமார், ஆசிஷ் இறந்தனர். காயமடைந்த சிலர் மீட்கப்பட்டு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீரர்களின் உயிர் தியாகத்துக்கு ராணுவம் புகழ் அஞ்சலி செலுத்தி உள்ளது. அருணாச்சல பிரதேச முதலல்வர் பெமா காண்டுவும் இரங்கல் தெரிவித்துள்ளார். வாகனம் கவிழந்தது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.