உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / DSPயை தாக்கியதால் வன்கொடுமை வழக்கில் சிக்கும் 8 பேர் | DSP Attacked | Aruppukkottai

DSPயை தாக்கியதால் வன்கொடுமை வழக்கில் சிக்கும் 8 பேர் | DSP Attacked | Aruppukkottai

ராமநாதபுரம், பெருமாள் தேவன்பட்டியை சேர்ந்த டிரைவர் காளிக்குமாரை, மர்ம கும்பல் திருச்சுழி - ராமேஸ்வரம் ரோட்டில் வெட்டி கொன்றது. போலீசார் காளிக்குமார் உடலை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குவிந்த உறவினர்கள், கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அருப்புக்கோட்டை-திருச்சுழி ரோட்டில் மறியல் செய்தனர். டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீஸார் அவர்களை தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென ஒருவர் டிஎஸ்பி தலை முடியை இழுத்து தாக்கினார்.

செப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை