12 புதிய தொழில் நகரங்கள் எங்கெல்லாம் வருது? | Ashwini Vaishnaw | Industrial Smart Cities
இருக்கு! பெருசா இருக்கு! 10 லட்சம் பேருக்கு வேலை ரெடி இறங்கி செய்யுது மத்திய அரசு! தேசிய தொழில் வழித்தட திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1 லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாயில் தொழில் நகரங்கள் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டது. இப்போது 10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. இந்த திட்டத்துக்காக 28 ஆயிரத்து 602 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். அதன்படி உத்தராகண்ட் மாநிலத்தின் குர்பியா, பஞ்சாப்பின் ராஜ்புரா, மகாராஷ்டிராவின் திகி துறைமுகம், கேரளாவில் பாலக்காடு, உத்தர பிரதேசத்தின் ஆக்ரா, பிரயாக்ராஷ், பீகாரின் கயா, தெலங்கானாவின் ஜாகீராபாத், ராஜஸ்தானின் ஜோத்பூர், ஆந்திராவின் கோபர்த்தி, ஓர்வாகல், ஜார்க்கண்ட்டில் ஜாம்ஷெட்பூர் உள்ளிட்ட இடங்களில் தொழில் நகரங்கள் அமைய உள்ளன. உலகத் தரத்தில் பசுமை நகரங்களாக இவை உருவாகும். இதன் மூலம் 10 லட்சம் பேர் நேரடியாகவும், 30 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள். உற்பத்தி நடவடிக்கைகள் அனைத்தும் இன்று இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து உள்ளது. மின்னணு, மொபைல்போன் மற்றும் பாதுகாப்புதுறை சார்ந்த உற்பத்தி அனைத்தும் இந்தியாவை நோக்கி வருகிறது. புதிதாக உருவாக உள்ள தொழில் நகரங்களில் இந்தியாவை சீரான வளா்ச்சி பாதையில் எடுத்து செல்லும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.