உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சர்வதேச தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு! Asia-Pacific Conference | Delhi | Modi | German

சர்வதேச தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு! Asia-Pacific Conference | Delhi | Modi | German

ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் Olaf Scholz மூன்று நாள் அரசு முறை பயணமாக நேற்று டில்லி வந்தார். மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். இன்று டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் ஜெர்மன் அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். தொடர்ந்து 18வது ஆசிய-பசிபிக் மாநாடு நடந்தது. ஜெர்மன் அதிபருடன் சேர்ந்து மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்க இதுவே சரியான நேரம். இந்தியாவின் சுறுசுறுப்பும், ஜெர்மனியின் துல்லியமும் ஒன்று சேரும்போதும், ஜெர்மனியின் பொறியியல் நுட்பத்துடன் இந்தியாவின் கண்டுபிடிப்புகள் இணையும் போதும், ஜெர்மனியின் தொழில்நுட்பங்கள் இந்திய திறமையுடன் சேரும்போதும், அது உலகுக்கு, குறிப்பாக இந்திய - பசிபிக் பிராந்தியத்துக்கு ஒளிமயமான எதிர்காலத்தை அளிக்கும்.

அக் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ