டில்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக ஆதிஷி தேர்வு Delhi's first Women Leader of Opposition| Atishi| A
டில்லி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 48ல் வெற்றி பெற்ற பாஜ 27 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை கைப்பற்றியது. 11 ஆண்டுகள் தொடர்ந்து டில்லியை ஆண்ட ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வென்று எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது. நாளை டில்லி சட்டசபை கூட்டம் துவங்க உள்ளது. புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்ற பின், சபாநாயகர் தேர்தல், முந்தைய அரசின் வரவு செலவு குறித்த சிஏஜி அறிக்கை தாக்கல் என அடுத்தடுத்த நிகழ்வுகள் நடக்க உள்ளன. இதனால், டில்லி அரசியலில் பரபரப்பு தொற்றியுள்ளது. டில்லி முதல்வர் ரேகாவை எதிர்கொள்ள எதிர்க்கட்சித் தலைவரும் பெண்ணாக இருந்தால் நல்லது என ஆம் ஆத்மி தலைமை கருதியது. டில்லியில் நடந்த ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டசபை குழு தலைவராக முன்னாள் முதல்வர் ஆதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.