உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காக்கா கூட்டில் சிக்கிய வளையல்! மீட்டு கொடுத்தவருக்கு பாராட்டு | bangle caught in crow's nest | Kera

காக்கா கூட்டில் சிக்கிய வளையல்! மீட்டு கொடுத்தவருக்கு பாராட்டு | bangle caught in crow's nest | Kera

ேரளா மலப்புரம், திருக்கலங்கோடு பகுதியை சேர்ந்தவர் சரத். இவரது மனைவி ஹரிதா. ஹரிதா 2022ல் வீட்டில் துணி துவைப்பதற்காக கையில் அணிந்திருந்த 1.5 பவுன் தங்க வளையலை கழற்றி வைத்து இருந்தார். அப்போது அங்கு வந்த காகம் திடீரென அந்த வளையலை கவ்விச் சென்றது. பல நாட்கள் தேடியும் வளையல் கிடைக்கவில்லை. இந்த சூழலில் சென்ற மாதம் ஹரிதா வீட்டின் அருகே உள்ள மாந்தோப்பில் மாங்காய் பறிக்க மரத்தில் ஏறிய, அப்பகுதியை சேர்ந்த அன்வர் காகத்தின் கூட்டில் தங்க வளையல் இருந்ததை கண்டெடுத்தார். வளையல் உரியவரிடம் போய் சேர அப்பகுதி நுாலக செயலர் பாபுராஜிடம் ஒப்படைத்தார். உரிய ஆவணங்களுடன் வருவோருக்கு வளையல் வழங்கப்படும் என நோட்டீஸ் வாயிலாக நுாலக நிர்வாகத்தினர் அறிவித்தனர். ஹரிதாவும் அவரது குடும்பத்தினரும், வளையல் வாங்கிய பில், வளையல் அணிந்த போட்டோ காண்பித்து வளையலை பெற்றனர். காகம் துாக்கி சென்ற தங்க வளையல் மூன்று பாகங்களாக உடைந்திருந்தன. இருந்தாலும் 3 ஆண்டுகளுக்கு பின் திரும்ப கிடைத்தது அதிர்ஷ்டம் என மகிழ்ச்சியில் சென்றனர். வளையலை எடுத்துக் கொடுத்த அன்வரை அனைவரும் பாராட்டினர்.

ஜூலை 17, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நாஞ்சில் நாடோடி
ஜூலை 17, 2025 13:01

காக்கா கூட்டில் சிக்கிய வளையல் மீட்கப்பட்டது. இதே வளையல் திமுக வினரிடம் சிக்கி இருந்தால் மீட்டு இருக்க முடியாது...


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !