புதிய சாதனை... இந்தியா கையிருப்பில் இவ்ளோ தங்கமா | Bank of England | RBI | gold return from UK
லண்டன் நகரில் பேங்க் ஆப் இங்கிலாந்து என்ற பெயரில் பிரிட்டனின் அரசு வங்கி செயல்படுகிறது. உலக நாடுகள் பல தங்கள் கையிருப்பில் உள்ள தங்கத்தை இந்த வங்கியில் தான் பாதுகாப்பாக சேமித்து வைத்திருக்கின்றன. இந்தியாவும் தனது வசம் உள்ள தங்கத்தை பேங்க் ஆப் இங்கிலாந்தில் தான் சேமித்து வைத்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்து இது ஒரு பாரம்பரியம் ஆகிவிட்டது. இப்போது இங்கிலாந்து வங்கியில் இருக்கும் தங்கத்தை படிப்படியாக இந்தியா கொண்டு வரும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. கடந்த மே மாதம் 100 மெட்ரிக் டன் தங்கத்தை இங்கிலாந்து வங்கியில் இருந்து மிகவும் பாதுகாப்பான முறையில் இந்தியாவுக்கு எடுத்து வந்தது ரிசர்வ் வங்கி. இப்போது அடுத்த கட்டமாக மேலும் 102 மெட்ரிக் டன் தங்கத்தை பேங் ஆப் இங்கிலாந்தில் இருந்து கொண்டு வந்து இருப்பதாக நம் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.