உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தோழியின் காதலனை தேடும் 3 தனிப்படை போலீசார் Bengaluru PG girl Murder | Bengaluru police commissioner

தோழியின் காதலனை தேடும் 3 தனிப்படை போலீசார் Bengaluru PG girl Murder | Bengaluru police commissioner

பீகாரை சேர்ந்தவர் கிருத்திகுமாரி. வயது 22. எம்.பி.ஏ பட்டதாரி. பெங்களூரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்து தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 23ம் தேதி இரவு கிருத்தி அறைக்குள் நுழைந்த நபர் அவரை தரதரவென வெளியே இழுந்து வந்து, கத்தியால் கழுத்தை அறுத்தார். பலமுறை அவரை குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. விடுதியில் செக்யூரிட்டி இல்லாததால் அந்த நபர் எளிதாக உள்ளே நுழைந்து பெண்ணை கொன்றது போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது. கிருத்திகுமாரியை கொலை செய்தவர் அபிஷேக். போபாலை சேர்ந்த இவர், கிருத்திகுமாரியின் முன்னாள் அறை தோழியின் காதலர். அவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்.

ஜூலை 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை