போருக்கு மத்தியில் ஐ.நாவில் உரை நிகழ்த்திய இஸ்ரேல் பிரதமர் | Benjamin netanyahu | Israel PM speech
இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஓராண்டை நெருங்கி விட்டது. ஹமாஸ் அமைப்பின் அக்டோபர்-7 தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, அண்டை நாடான லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு ஆதரவாக உள்ளது. ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹிஸ்புல்லா, இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. சில நாட்கள் முன்பு ஹிஸ்புல்லாக்களை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய பேஜர், வாக்கி டாக்கி தாக்குதல் தான் தீவிர சண்டைக்கு வித்திட்டது. தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் குண்டு வீசி வருகிறது. ஹிஸ்புல்லாவும் பதில் தாக்குதல் நடத்துகிறது. இந்த சூழலில் ஐ.நா. சபையின் 79-வது அமர்வில் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர், பிராந்திய பதற்றங்கள் குறித்து பல்வேறு தலைவர்கள் பேசுகின்றனர். குறிப்பாக, போரை நிறுத்த வேண்டும் என இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். முழு அளவிலான போர் வெடிக்கலாம் என்பதால், இஸ்ரேலும், ஹிஸ்புல்லாவும் 21 நாட்களுக்கு தற்காலிகமாக போரை நிறுத்த வேண்டும்.