மகனைப்போல அப்பா கதை முடிப்பு: பாஜ நிர்வாகிக்கு நேர்ந்த பரிதாபம் bihar businessman Gopal khemka sho
பீகாரில் பாஜ, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தலைநகர் பாட்னாவைச் சேர்ந்தவர் கோபால் கெம்கா. தொழிலதிபர். பீகார் மாநிலத்திலுள்ள மிகவும் புகழ்பெற்ற Magadh மருத்துவமனையின் தலைவர் ஆவார். இதுதவிர, இன்னும் சில தொழில்களையும் கோபால் கெம்கா செய்து வந்தார். பாட்னா கெம்கா என அழைக்கப்பட்ட அவர், பாரதிய ஜனதா கட்சியிலும் பொறுப்பு வகித்தார். காந்தி மைதானம் ஏரியாவில் உள்ள வீட்டுக்கு நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் காரில் திரும்பினார். மெயின்கேட் முன் கார் நின்றதும், காரை விட்டு இறங்க டோரை ஒபன் செய்தார். அங்கே தயாராக நின்றிருந்த லைட் புளூ கலர் சட்டை அணிந்த ஆசாமி, காரை நெருங்கி வந்து கெம்காவை துப்பாக்கியால் சரமாரி சுட்டான். இதில், காரிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார், கோபால் கெம்கா. செக்யூரிட்டி அலறியடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடினார். அதற்குள் கொலையாளி பைக்கில் தப்பி ஓடி விட்டான். கோபால் கெம்கா சுட்டுக் கொல்லப்படும் சிசிடிவி வீடியோ பீகாரில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. போலீசார் வந்து கோபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாட்னா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோபால் கெம்கா சுட்டுக் கொல்லப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. தொழில் விரோதமா? அல்லது அரசியல் பிரச்னையா? அல்லது வேறு காரணமா? என போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகி்னறனர். 4 ம் தேதி இரவு 11 மணியளவில் காந்தி மைதானம் தெற்கு ஏரியாவில் தொழிலதிபர் கோபால் கெம்கா சுட்டுக் கொல்லப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. குற்றம் நடந்த இடத்தை சுற்றி வளைத்து உடனடியாக விசாரணை நடத்தினோம் ஒரு தோட்டாவை சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றி இருக்கிறோம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். கொலையாளியை அடையாளம் காண தீவிரமாக முயற்சித்து வருகிறோம் தொழிலதிபர் கோபால் கெம்கா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை ராஷ்ட்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் கையில் எடுத்துள்ளன. பாஜ, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டதையே இந்த சம்பவம் காட்டுகிறது. பாரதிய ஜனதாவில் அங்கம் வகித்த ஒரு தொழிலதிபருக்கே பாதுகாப்பு இல்லாதபோது, பீகாரில் சாதாரண மக்களுக்கு எங்கே பாதுகாப்பு கிடைக்கப் போகிறது? முதல்வர் நிதிஷ்குமார் தோற்று விட்டார் அவருக்கு சட்டசபை தேர்தலில் மக்கள் சரியான அடி கொடுப்பார்கள் என எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் சாடினார். இன்னும் சில மாதங்களில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கோபால் கெம்கா கொலை நிதிஷ்குமாருக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கோபால் கெம்கா சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு 3 மணி நேரம் கழித்தே சம்பவ இடத்துக்கு போலீசார் வந்ததாக, அவரது சகோதரர் சங்கர் கெம்கா பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். பீகார் போலீசாரி்ன் செயல்பாடு இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது என அவர் கோபமாக பேசும் வீடியோ, பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோபால் கெம்காவின் மகன் குஞ்சன் Gunjan 2018-ம் ஆண்டு இதே பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டார். பாட்னா அருகே உள்ள Vaishali பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் காரை விட்டு இறங்கியபோது அவரை மர்ம ஆசாமிகள் சுட்டுக் கொன்றனர். அவர் தொழில் போட்டியால் கொலை செய்யப்பட்டார். ஆறரை ஆண்டுகள் கழித்து அப்பா கோபாலும் அதே பாணியில் கொல்லப்பட்டது பீகார் தொழில் துறையினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. சுயேச்சை எம்.பி. பப்பு யாதவ் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை பார்த்து ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறுகையில் பீகார் கிரிமினல்களின் கூடாரமாக மாறிவிட்டது என்றார். மகன் குஞ்சனை கொன்ற கொலையாளிகள் மீது பீகார் அரசு கடும் நடவடிக்கை எடுக்க தவறி விட்டது. அதை செய்திருந்தால், இப்போது கோபால் கெம்கா கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார் என பப்பு யாதவ் கூறினார்.