/ தினமலர் டிவி
/ பொது
/ ஆற்றில் மூழ்கியவரை படகில் 2 மணிநேரம் தேடிய குழுவினர் Nonankuppam bridge accident| car hit bike|
ஆற்றில் மூழ்கியவரை படகில் 2 மணிநேரம் தேடிய குழுவினர் Nonankuppam bridge accident| car hit bike|
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சி முட்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். வயது 32. புதுச்சேரியில் தனியார் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர், பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். புதுச்சேரி அடுத்த நோணாங்குப்பம் பாலத்தில் சென்றபோது, எதிர் திசையில் வந்த கார், முன்னாள் சென்ற பள்ளி வாகனத்தை ஓவர் டேக் செய்ய முயன்றபோது, சந்தோஷ் பைக் மீது பயங்கரமாக மோதியது. பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட சந்தோஷ், பாலத்தின் கீழே ஓடும் சுண்ணாம்பு ஆற்றில் போய்விழுந்தார். கார் மோதியதில், மற்றொரு டூவீலரில் வந்த பூர்ணாங்குப்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
ஆக 28, 2025