சிசிடிவி ஆதாரத்துடன் பாஜவினர் போலீசில் புகார்! BJP | Ex District Leader | Hosur | Krishnagiri
பாஜ பிரமுகர் வீட்டில் அத்துமீறிய ஆசாமிகள்! நள்ளிரவில் அலறிய குடும்பம்! கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தேர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். பாஜ முன்னாள் மாவட்ட தலைவராக இருந்தார். நேற்று நள்ளிரவில் இவரது வீட்டுக்கு மர்ம ஆசாமிகள் இரண்டு பேர் வந்தனர். கேட்டை திறந்து உள்ளே வந்தவர்கள் கதவை வேகமாக தட்டி வீட்டில் இருந்தவர்களை அச்சப்படுத்தி உள்ளனர். கதவு லென்ஸ் வழியாக பார்த்த வீட்டில் இருந்தவர்கள் பயத்துடன் அமைதியாக இருந்துள்ளனர். நாகராஜ் முதல் தளத்தில் இருந்துள்ளார். அங்கும் சென்று ஆசாமிகள் கதவை தட்டி சத்தமிட்டுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் தகவல் கொடுத்ததால், நாகராஜ் கதவை திறக்காமல் அமைதி காத்துள்ளார். சுமார் 10 நிமிடம் அங்கேயே திரிந்த ஆசாமிகள் பின்னர் அங்கிருந்து கிளம்பினர். சம்பவம் குறித்து பாஜவினருடன் சென்று நாகராஜ் ஒசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளையும் போலீசிடம் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.