உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / PM Shri திட்டத்தை அமல்படுத்த மறுப்பது ஏன்? BJP Annamalai | PM Shri Scheme | TN Government School In

PM Shri திட்டத்தை அமல்படுத்த மறுப்பது ஏன்? BJP Annamalai | PM Shri Scheme | TN Government School In

பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம், உட்கட்டமைப்பை மேம்படுத்தும், பிரதமர் நரேந்திர மோடியின் PM Shri திட்டத்தால், நாடு முழுவதும் உள்ள 20,000க்கும் அதிகமான பள்ளிகள் இதுவரை பயனடைந்துள்ளன. ஆனால் தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக, தமிழகத்தில், PM Shri திட்டத்தை இதுவரை திமுக அரசு செயல்படுத்தாமல் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும், தமிழகம் முழுவதும் சிதிலமைடைந்துள்ள, 10,000 அரசுப் பள்ளிகளுக்கு, புதிய கட்டிடம் கட்டித் தரப்படும் என வாக்குறுதியளித்தனர். இதுவரை எத்தனை பள்ளிகளுக்குப் புதிய கட்டிடங்கள் கட்டியுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. இந்த சூழலில் பல புதிய பள்ளிக் கட்டிடங்கள், திறக்கப்பட்டு சில மாதங்களிலேயே, கூரை இடிந்து விழும் அவலத்தையும் பார்க்கிறோம். ஒவ்வொரு மாதமும், தமிழகத்தில் பள்ளி கூரை இடிந்து விழுந்த செய்தி வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆக 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ