முதல்வர் செய்ய வேண்டியதை நாங்கள் செய்கிறோம் BJP| Mk Stalin| Annamalai|
உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தாயின் பெயரில் ஒரு மரம் என்ற இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியிலும் அனைவரும் மரக்கன்றுகள் நட அழைப்பு விடுத்தார். இதை கையில் எடுத்துள்ள தமிழக பாஜவினர் மாவட்டம்தோறும் மரக்கன்றுகள் நட்டு வருகின்றனர். திருப்பூர் அவிநாசியில் உள்ள தாமரை குளம் பகுதியில் பாஜ சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு தன்னார்வ அமைப்பினர் மற்றும் மலேசியா துணை அமைச்சர் தமிழகத்தை சேர்ந்த குலசேகரன் கலந்து கொண்டு மரக்கன்றுகள், பனை விதைகளை நட்டு வைத்தனர்.
ஆக 11, 2024