செங்கல் சூளைகள் பற்றி புகார் அளித்தவருக்கு பாதுகாப்பு இல்லை
தென்காசி மாவட்டம், சிவகிரியை சேர்ந்தவர் கார்த்திக். நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் அணி ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர், சிவகிரி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, 20 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளது. படுகாயம் அடைந்த கார்த்திக் தென்காசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சட்டவிரோத செங்கல்சூளை பற்றி புகார் அளித்ததால் அதன் உரிமையாளர்கள் தம்மை தாக்கியதாக கார்த்திக் கூறினார்.
மார் 17, 2025