உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசு பஸ்சில் பூச்சிகள் இலவச பயணம்: பயணிகள் அவதி | Bus hygiene | Passenger complaints |

அரசு பஸ்சில் பூச்சிகள் இலவச பயணம்: பயணிகள் அவதி | Bus hygiene | Passenger complaints |

தர்மபுரி, பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கும் பெரும்பாலான அரசு பஸ்கள் முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை. இதனால் பல பஸ்களில் கரப்பான் பூச்சிகள், மூட்டை பூச்சிகள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. மக்கள் இருக்கையில் அமர்ந்திருக்கும் போதே கை, கால்களில் ஏறி ஊர்ந்து செல்கின்றன. பூச்சிகளுக்கு பயந்து பலர் இருக்கையில் அமராமல் நின்று கொண்டே பயணிக்கின்றனர். இது போன்ற பஸ்களில் குழந்தைகளை அழைத்து வரவே பயமாக இருக்கிறது என பயணிகள் வருத்தம் தெரிவித்தனர். டிப்போக்களில் பஸ்கள் முறைப்படி சுத்தம் செய்து பாராமரிக்க வேண்டும். பூச்சிகள் அண்டாமல் இருக்க அதற்கான மருந்துகள் அடித்து சுகாதரமாக வைத்திருக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். #DharmapuriBuses #PennagaramStand #TNSTC #BusCleanliness #CockroachInfestation #BedBugs #PublicTransportHygiene #PassengerSafety #TamilNaduTravel #GovernmentBusIssues

நவ 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !