இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு தேதியை மாற்றிய தேர்தல் கமிஷன் bye election poll date changed| 14 assembly
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் வரும் 20ம் தேதியும், ஜார்க்கண்டில் வரும் 13, 20ம் தேதி என 2 கட்டங்களாகவும் தேர்தல் நடக்கிறது. இதோடு நாடு முழுதும் 15 மாநிலங்களில் காலியாக உள்ள 48 சட்டசபை மற்றும் 2 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி, உத்தர பிரதேசத்தில் 9 தொகுதிகளுக்கும், ராஜஸ்தானில் 7, மேற்கு வங்கம் - 6, அசாம் 5, பஞ்சாப், பீகாரில் தலா 4, கர்நாடகாவில் 3, கேரளா, மத்திய பிரதேசம், சிக்கிமில் தலா 2, சத்தீஸ்கர், குஜராத், மேகாலயா, உத்தராகண்ட் மாநிலங்களில் தலா 1 தொகுதி என 48 சட்டசபை தொகுதிகள், கேரளாவின் வயநாடு மற்றும் மகாராஷ்டிராவின் நான்தெட் லோக்சபா தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் தேதி வெளியானது. இவற்றில் உத்தராகண்ட்டின் கேதார்நாத் சட்டசபை தொகுதி, மகாராஷ்டிராவின் நான்தெட் லோக்சபா தொகுதியில் நவம்பர் 20ம் தேதியும், கேரளாவின் வயநாடு லோக்சபா மற்றும் 14 மாநிலங்களில் உள்ள 47 சட்டசபை தொகுதிளில் நவம்பர் 13ம் தேதியும் இடைத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அனைத்து தொகுதிகளிலும் பதிவாகும் ஒட்டுகள் நவம்பர் 23ல் எண்ணப்பட்டு ரிசல்ட் வெளியிடப்பட உள்ளது.