US மாகாணமாக கனடா இருக்கணும்: டிரம்ப் பிடிவாதம் Canada | Nastiest country |Trump |
அமெரிக்க அதிபராக பதவி ஏற்றது முதல் கனடாவுக்கு எதிராக டிரம்ப் பேசி வருகிறார். அமெரிக்காவுடன் கனடா 51வது மாநிலமாக சேர்ந்துவிட வேண்டும். அந்த நாட்டுக்கு நாங்கள் நிறைய மானியம் தருகிறோம் என்றெல்லாம் சொன்னார். ஆனால், அவரது ஆபரை கனடா நிராகரித்தது. கனடாவில் புதிய பிரதமர் மார்க் கார்னியும் அதே நிலைப்பாட்டில் உள்ளார். கனடாவின் இறையாண்மையை அவமதிக்கும் வகையிலான பேச்சுகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் கைவிட வேண்டும். அப்படி செய்தால் அமெரிக்காவுடனான உறவுகள் குறித்து பேசுவோம் என மார்க் கார்னி கூறி இருந்தார். இந்நிலையில் கனடா ஒரு மோசமான நாடு என டிரம்ப் மீண்டும் பேசி இருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், நான் ஒவ்வொரு நாட்டையும் நேரடியாக அல்லது மறைமுகமாக கையாள்கிறேன். ஆனால், சமாளிக்கவே முடியாத நாடுகளில் மோசமானது கனடா. அந்நாட்டுக்கு அமெரிக்கா ஆண்டுக்கு 200 பில்லியன் டாலர் மானியம் அளிக்கிறது. எங்களுக்கு கனடாவின் ஆற்றல் தேவையில்லை; ஆட்டோ மொபைல் உள்ளிட்ட அவர்களின் எந்த பொருளுமே தேவையில்லை. அது எங்கள் 51வது மாநிலமாக இருக்க வேண்டும்.