உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்காவுடன் கனடா இணைய டிரம்ப் வலியுறுத்தல் trudeau| canada| Resigned| PM| Drump| Anitha Ananth|

அமெரிக்காவுடன் கனடா இணைய டிரம்ப் வலியுறுத்தல் trudeau| canada| Resigned| PM| Drump| Anitha Ananth|

கனடா நாட்டில் இந்தாண்டு பொது தேர்தல் நடக்க உள்ள சூழலில் பிரதமர் மற்றும் லிபரல் கட்சி தலைவர் ஜஸ்டீன் ட்ரூடோ 2 பதவிகளை ராஜினாமா செய்தார். கனடாவில் 2-வது மிகப் பெரிய சமூகமாக சீக்கியர்கள் உள்ளனர். அவர்களின் வாக்குகளைப் பெருமளவு பெற்று ட்ரூடோ ஆட்சியைப் பிடித்தார். 2023ல் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். அதன்பிறகு, இந்தியா - கனடா உறவில் விரிசல் விழுந்தது. கனடா தேசத்தின் இறையாண்மையில் இந்தியா தலையிடுவதாக ட்ரூடோ கருதினார். இந்திய மாணவர்களுக்கு விசா வழங்குவதில் பல கட்டுப்பாடுகளை அவர் விதித்தார். இதனால், அவருடைய லிபரல் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது. சிலர் அவர் பதவி விலக வேண்டும் என வெளிப்படையாகவே கூறினர். 9 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் இருக்கும் ஜஸ்டினுக்கு மக்களிடம் செல்வாக்கும் குறைந்து வருகிறது. வரும் தேர்தலில் அவருயை லிபரல் கட்சி தோல்வி அடையும் என்றும் கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன.

ஜன 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !