உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னையில் பாலத்தின் மீது உருண்டு பறந்த கார் | Car Accident | Basin bridge | Chennai Vysarpadi

சென்னையில் பாலத்தின் மீது உருண்டு பறந்த கார் | Car Accident | Basin bridge | Chennai Vysarpadi

கரப்பான் பூச்சி போல கவிழ்ந்த கார்! வியாசர்பாடியை அலறவிட்ட சிறுவன் சென்னை வியாசர்பாடி பகுதியில் இருந்து பேசின் பிரிட்ஜ் நோக்கி சொகுசு கார் சென்றது. பேசின் பிரிட்ஜ் மேம்பாலம் முடியும் இடத்தில் திடீரென பல்டி அடித்து தலைகுப்புற கவிழ்ந்தது. அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காருக்குள் சிக்கிய 5 இளைஞர்களை மீட்டனர். இதில் யாருக்கும் பெரிய அளவில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த காரை புளியந்தோப்பு போக்குவரத்து போலீசார் மீட்டனர். கிரேன் மூலம் தூக்கப்பட்டு ரோட்டில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. போலீஸ் விசாரணையில் காரை ஓட்டியது 18 வயது சிறுவன் என தெரியவந்தது. அவனுக்கு லைசென்ஸ் இல்லை. பாலத்தில் இறங்கும் போது வேகத்தை குறைக்காமல் ஆக்சிலரேட்டரை வேகமாக அழுத்தி உள்ளான். இதனால் வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை