தினமலரின் கார்னிவல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் சூப்பரோ சூப்பர் Carnival Appartment Function
எங்க கிராமத்தில் நடக்கும் திருவிழா மாதிரி இருந்துச்சு! Stress போயே போச்சு ஃபுல் ஹேப்பி சென்னை, திருவேற்காடு, சுந்தர சோழபுரத்தில் உள்ள ஆர்எம்கே. சோழா அடுக்குமாடி குடியிருப்பில், தினமலர் கார்னிவெல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. கோலப்போட்டி, மாரத்தான், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், ஆடல், பாடல் நிகழ்ச்சி, சிறுவர் விளையாட்டு, மேஜிக் ஷோ, உறியடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, உற்சாகமாக பங்கேற்று மகிழ்ந்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை, கிட்டீ பட்டீ, பூர்விகா அப்ளையன்ஸ், நிசான், மயில் மார்க் ஹோம் கேர் புரோடக்ட்ஸ், குருதேவ் ஸ்கோடா, ஆதித்யா போர்ஸ், போகா ஈவென்ட் ஆகியவை இணைந்து நடத்தின.