உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பீதியில் உறைந்த கிராம மக்களுக்கு கிடைத்த தீர்வு | CCTV | Palladam

பீதியில் உறைந்த கிராம மக்களுக்கு கிடைத்த தீர்வு | CCTV | Palladam

திருப்பூர் பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் நவம்பர் 29ம் தேதி தெய்வசிகாமணி, அலமேலு, அவர்களது மகன் செந்தில்குமார் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். போலீசார் 14 தனி படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொலை நடந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் சிசிடிவி காட்சிகள்,செல்போன் சிக்னல் என எதிலும் துப்பு கிடைக்காமல் திணறுகின்றனர். கொலையான மூன்று பேரின் பின்னணி பற்றி விசாரித்து அதில் தொடர்புடையவர்களுடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த சேமலைகவுண்டம்பாளையம், கண்டியன்கோயில் சுற்றுவட்டார மக்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. கொலை சம்பவத்துக்கு பிறகு இரவு நேரங்களில் கால்நடைகளுக்கு தீவனம் வைக்க கூட வெளியே வர முடியாமல் பயத்தோடு வாழ்கிறோம் என அப்பகுதி மக்கள் கூறினர்.

ஜன 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை