உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சம்பவத்தை காட்டிய சிசிடிவி! குற்றவாளி கைது | CCTV | Velachery | Perungudi railway station

சம்பவத்தை காட்டிய சிசிடிவி! குற்றவாளி கைது | CCTV | Velachery | Perungudi railway station

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ரோசி, வயது 40. தனியார் பள்ளி ஆசிரியர். நேற்று மாலை பெருங்குடி ரயில்வே ஸ்டேஷனில் வீட்டுக்கு செல்ல ரயிலுக்காக காத்து இருந்தார். பிளாட்பார்மில் உட்கார்ந்து இருந்த அவரது அருகே வந்து உட்கார்ந்த இளைஞனன், ரோசி சுதாரிக்கும் முன் அவர் அணிந்து இருந்த 3 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு ஓடினான். ரோசி கூச்சலிடும் பயனில்லை. அவன் அங்கிருந்து தப்பினான். இது தொடர்பான காட்சிகள் அங்கு இருந்த சிசிடிவியில் பதிவாகியது. இதன் அடிப்படையில் விசாரித்து செயின் பறிப்பு ஆசாமியை பெருங்குடி ரயில்வே போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

ஜூலை 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை