உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செங்கோட்டையில் பகீர்: ரூ.1.5 கோடி தங்க கலசங்கள் திருட்டு | Golden Kalash | Daslakshan Mahaparv

செங்கோட்டையில் பகீர்: ரூ.1.5 கோடி தங்க கலசங்கள் திருட்டு | Golden Kalash | Daslakshan Mahaparv

ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை எட்டுவதற்காக, ஆன்மாவின் 10 நற்பண்புகளை கொண்டாடும்விதமாக, தஸ்லக்க்ஷன் மஹாபர்வ் Daslakshan Mahaparv என்ற என்ற ஜைன மத விழா, டில்லி செங்கோட்டையில் நடந்து வருகிறது. 10 நாள் நடக்கும் இந்த விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வருகின்றனர். விழாவையொட்டி தினமும் நடக்கும் பூஜைகளுக்காக தொழிலதிபர் சுதிர் ஜெயின் என்பவர் தன் வீட்டில் இருந்து தங்க கலசங்களையும், தங்க தேங்காயையும் கொண்டு வந்திருந்தார். கடந்த செவ்வாயன்று நடந்த விழாவில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார். அந்த சமயத்தில் விழாவுக்கு வந்த சிறப்பு விருந்தினர்களை வரவேற்க விழா ஒருங்கிணைப்பாளர்கள் சென்று விட்டனர். அந்நேரம் பூஜை செய்வதற்காக மேடையில் வைக்கப்பட்டிருந்த 2 தங்க கலசங்கள், தங்கத்தினால் ஆன தேங்காய் ஆகியவற்றை ஒரு ஆசாமி திருடிச் சென்று விட்டான்.,

செப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை