உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவையில் பைக்கில் வந்து செயின் பறிக்கும் பெண்கள் | Coimbatore | Chai Snatch

கோவையில் பைக்கில் வந்து செயின் பறிக்கும் பெண்கள் | Coimbatore | Chai Snatch

கோவை, பீளமேடு, எல்லை தோட்டத்தைச் சேர்ந்தவர் கீதாரமணி, வயது 56. சில நாட்களுக்கு முன் வீட்டின் அருகே வளர்ப்பு நாயுடன் வாக்கிங் சென்றார். அப்போது அந்த வழியாக இரண்டு பெண்கள் டூவீலரில் வந்தனர். கீதாரமணியை நிறுத்தி அட்ரஸ் கேட்பது போல நடித்துள்ளனர். அப்போது உங்கள் கழுத்தில் எறும்பு இருக்கு என தட்டிவிடுவது போல கீதாரமணி அருகில் வந்த பெண் அவரது கழுத்தில் இருந்த நாலரை பவுன் தங்க செயினை பறித்தார். கீதாரமணி அலறல் சத்தம் கேட்டு, கணவர், மகன் ஓடிவந்து, தப்ப முயன்ற இரு பெண்களையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். செயின் பறிப்பில் ஈடுபட்டது திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணவேணி, அபிராமி என விசாரணையில் தெரிய வந்தது. இருவரும் சுய உதவி குழுக்கள் மூலமாக லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளனர். கடன்களுக்கான தொகையை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளனர்.

மார் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !