/ தினமலர் டிவி
/ பொது
/ கடல் போல் காட்சி தருகிறது செம்பரம்பாக்கம் ஏரி! | Chembarambakkam lake | Heavy Rain | IMD
கடல் போல் காட்சி தருகிறது செம்பரம்பாக்கம் ஏரி! | Chembarambakkam lake | Heavy Rain | IMD
புயல் மழையால் சென்னையின் நீர்நிலைகளில் நீர்வரத்து உயரத் தொடங்கி உள்ளது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியில் 4 மணி நேரத்தில் எட்டு மடங்காக நீர்வரத்து அதிகரித்துள்ளது. மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் இப்போது 2,368 மில்லியன் கனஅடியாக நீர் இருப்பு உள்ளது. நீர்மட்ட உயரம் 24 அடியில் 19 அடியை எட்டி இருக்கிறது. ஏரியில் பலத்த காற்றும் வீசி வருவதால் கடலில் எழும்பும் அலைகள் போல் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
நவ 30, 2024