உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆன்லைனில் கோடரி வாங்கி சம்பவம் செய்தது அம்பலம்

ஆன்லைனில் கோடரி வாங்கி சம்பவம் செய்தது அம்பலம்

சென்னை பெரம்பூரில் கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், புதிதாக கட்டப்பட்டு வரும் அவரது வீட்டின் முன் மர்ம ஆசாமிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை செய்ய பயன்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற அழைத்து செல்லும்போது, திருவேங்கடம் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றான். அவனை போலீசார் விரட்டி சென்றனர். அப்போது நடந்த சண்டையில் திருவேங்கடத்தை போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கில், அதிமுக நிர்வாகி வழக்கறிஞர் மலர்க்கொடி சேகர், அவரது உதவியாளர் ஹரிஹரன், திமுக வழக்கறிஞர் சதீஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். வடசென்னை மேற்கு மாவட்ட பாஜ மகளிர் அணி துணை செயலாளராக இருந்த அஞ்சலையையும் போலீசார் கைது செய்தனர். கொலையாளிகளுக்கு பணம் கொடுத்ததுடன் அவர்களுக்கு தங்குமிடத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்ததாக அஞ்சலை வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜூலை 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை