உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லட்சக்கணக்கில் குவிந்த மக்கள்; சாதனை படைத்த சாகச நிகழ்ச்சி Airforce Day Function| Chennai Air Show

லட்சக்கணக்கில் குவிந்த மக்கள்; சாதனை படைத்த சாகச நிகழ்ச்சி Airforce Day Function| Chennai Air Show

போர் விமானங்களின் பிரம்மிக்க வைத்த சாகசம் AIR SHOW வேற லெவல் இந்திய விமானப்படை துவங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாடும் வகையில், சென்னையில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மெரினா கடற்கரையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் ஏபி சிங், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர். விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண, லட்சக்கணக்கானோர் மெரினா கடற்கரையில் திரண்டனர். கழுகுப்பார்வையில் பார்த்த போது, மெரினாவில் மணல் பரப்புக்கு பதில் பதில் மனித தலைகளே தெரிந்தன. சுளீர் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்தபடி விமான சாகசத்தை கண்டு ரசித்தனர். இந்திய விமானப்படையின் சுகோய், தேஜாஸ், ரபேல் ரக போர் விமானங்கள் வானில் வட்டமடித்து சாகசங்கள் செய்தன. 2ம் உலக போரின் போது பயன்படுத்தப்பட்ட பழமையான விமானமான டகோடா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து 2,000 கிமீ பறக்கும் திறனுடைய C- 295 விமானம், போரில் எதிரிகளை மிரட்டும் மிக் 29 ரக விமானங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. விமானப்படையின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றான C17 விமானம் வானில் பறந்த போது, மக்கள் ஆரவாரம் செய்து வியப்புடன் பார்த்தனர். சிறிய, பெரிய ரக ஹெலிகாப்டர்களும் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றன. போர் விமானங்கள் வானில் குட்டிக்கரணம் அடித்தும், பல கோணங்களில் பறந்ததும் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தது.

அக் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !