போலீசிடம் அட்ராசிட்டி செய்த இளைஞருக்கு கைக்கட்டு Chennai crime | youth behave obscenely at police
சொடக்கு போட்டு ஆபாச சைகை
இளைஞரின் கைக்கு மாவுக்கட்டு!
போலீசிடம் தகாதபடி
நடந்தவருக்கு நேர்ந்த கதி
சென்னை வியாசர்பாடி, அம்பேத்கர் கல்லூரி சிக்கனல் அருகே கடந்த 31ம் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அதிவேகமாக வந்த பைக்கை மடக்கினர். அதில் வந்த இளைஞர்கள் இருவரும் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.
நம்பர் பிளேட்டும் இல்லை; ஆவணங்களும் இல்லாததால், பைக்கை பறிமுதல் செய்தனர்.
அதனால் ஆத்திரமடைந்த ஒரு இளைஞன், போலீசை தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியும் சாபமிட்டார். பெண் போலீசார் முன் அருவருக்கத்தக்க வகையில் ஆபாச சைகை காட்டியும் அடாவடி செய்தார்.
breath
இது தொடர்பாக, எம்கேபிMKB நகர் போலீசார் விசாரித்ததில், ரகளை செய்தவர் ரெட்ஹில்ஸ் நாரவாரி குப்பத்தை சேர்ந்த 24 வயதான டெல்லிபாபு என்பது தெரிந்தது.
முல்லை நகர் சுடுகாடு அருகே இருந்த டெல்லி பாபுவை போலீசார் பிடிக்க முயன்றபோது, அவர் தப்பி ஓடியிருக்கிறார். அப்போது, கீழே விழுந்ததில் இளைஞரின் வலது கை உடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டது. பின் நடந்த விசாரணையில், சம்பவத்தன்று நண்பரின் பையில் மற்றொரு நண்பருடன் மதுபோதையில் வேகமாக வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.