உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொடிகாத்த குமரன் பேரனை மிரட்டிய மாஜி தம்பி: பரபரப்பு தகவல் Tiruppur Kumaran kodi katha kumaran gra

கொடிகாத்த குமரன் பேரனை மிரட்டிய மாஜி தம்பி: பரபரப்பு தகவல் Tiruppur Kumaran kodi katha kumaran gra

பாலவாக்கம், அண்ணா சாலையை சேர்ந்தவர் குமரேசன்(73). சுதந்திர போராட்ட வீரர் கொடிகாத்த குமரனின் மகன் வழி பேரன் ஆவார். சிவில் இன்ஜினியராக பணிபுரிந்தவர். இவருக்கு சொந்தமான 2 கிரவுண்ட் நிலம் மதுரவாயல், ராஜலட்சுமி நகரில் உள்ளது. 1992 ஆம் ஆண்டு இந்த நிலத்தை வாங்கியுள்ளார். அவ்வப்போது நிலத்திலுள்ள செடி கொடிகளை வெட்டி சுத்தம் செய்வதுண்டு. 2022ல் இடத்தை சுத்தம் செய்ய சென்றபோது மற்றொரு நபர் அது தன்னுடைய இடம் என சொந்தம் கொண்டாடினார். போலியான ஆவணங்களை காட்டி குமரேசனுடன் சண்டை போட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, நில அபகரிப்பு பிரிவு போலீசில் குமரேசன் புகார் அளித்தார்.

பிப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை