திருவொற்றியூர் ஆசிமை NIA கைது செய்த பின்னணி | chennai NIA raid | Mohammed Asim | Tiruvottiyur NIA
BJP நிர்வாகி கதை முடித்த வழக்கு NIA தூக்கிய முகமது ஆசிம் யார்? திருவொற்றியூர் ரெய்டு பின்னணி சென்னை திருவொற்றியூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் முகமது ஆசிம் வயது 39; தரை விரிப்புகள் தயாரிக்கும் நிறுவனம் வைத்துள்ளார். இவரது வீட்டில் நேற்று காலையில் திடீரென என்ஐஏ அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். 3 மணி நேர சோதனைக்கு பிறகு ஆசிமை கைது செய்து அழைத்து சென்றனர். ரெய்டு குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம்: கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜ நிர்வாகி பிரவீன் நெட்டரு. பிஎப்ஐ எனப்படும் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பினரால் 2022 ஜூலை மாதம் பிரவீன் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகினறனர். கொலையாளிகளாக 23 பேரை அடையாளம் கண்டுள்ளனர்; 19 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர். கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் பற்றி துப்பு துலக்க ஒரே நேரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 16 இடங்களில் ரெய்டு நடந்தது. அதில் திருவொற்றியூரில் வசித்து வந்த ஆசிம் வீடும் ஒன்று.