17ம் தேதி வரை அடித்து ஊற்ற போகுது கனமழை! | Rain | chennai rain | rain alert | IMD
ளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்மேற்கு வங்கக்கடலில் இன்று உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது. இது அதற்கடுத்த 2 தினங்களில் மேற்கு திசையில் தமிழக இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி சென்னை, திருவள்ளுர் காஞ்சிபும், செங்கல்பட்டில் ஓரிரு இடங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை சென்னை, திருவள்ளுர் காஞ்சிபும், செங்கல்பட்டு, விழுப்புரம் உட்பட 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை எச்சரித்து உள்ளது. அதே போல் 15ம் தேதி வரை தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. 16 மற்றும் 17 தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலத்தில் கன மழை பெய்யலாம் என கூறப்பட்டது உள்ளது.