/ தினமலர் டிவி
/ பொது
/ மீண்டும் அதே பாணியில் தூக்கி சென்றது போலீஸ்|chennai sanitation workers protest|Chennai corporation
மீண்டும் அதே பாணியில் தூக்கி சென்றது போலீஸ்|chennai sanitation workers protest|Chennai corporation
சென்னை மாநகராட்சியிடம் பணி நிரந்தரம் கோரி தூய்மை பணியாளர்கள் 2 மாதங்களாக வெவ்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தேனாம்பேட்டையில் திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் முற்றுகையிட திரண்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். குண்டுக்கட்டாக தூக்கியும், தரதரவென இழுத்து சென்றும் போலீஸ் வேனில் ஏற்றியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. அறிவாலயத்தை சுற்றி 100க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தின் போது பெண் தூய்மையை பணியாளர் ஒருவர் மயக்கமடைந்தார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
டிச 30, 2025