கண்முன்னே வீடு இடிவதை கண்டு வேதனை | Chennai | Land encroachment
சென்னை குன்றத்தூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து முருகன் கோயில் வரை ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. ரோட்டின் மீதுள்ள கட்டிடங்களை இடித்து அகற்றுமாறு நெடுஞ்சாலை துறை, வருவாய் துறை சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிலர் கடைகள், வீடுகளின் முன் இருந்த ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்றி கொடுத்தனர். இன்று திடீரென அதிகாரிகள் ஜேசிபி எந்திரங்களுடன் வந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கட்டடங்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஆக 28, 2024